Developed by - Tamilosai
ஈராக் பிரதமர் முஸ்டஃபா கதிமியின் இல்லத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ட்ரோன் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பாதுகாவலர்கள் பலர் காயமடைந்த நிலையில் பிரதமர் நலமுடன் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை ஈராக் பிரதமரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் பாக்தாத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.