Developed by - Tamilosai
தனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
மேலும் மக்களின் உடனடித் தேவைகளை எழுத்துமூலமாக ஒப்படைக்குமாறும் ஆளுநர் கோரியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண எழுச்சி தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்தை வரவேற்ற இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.