தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகரிக்கப்படவுள்ள லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள்

0 244

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

121 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 124 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், 92 எல்.பீ ரக பெட்ரோல் லீட்டரொன்றிற்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 184 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 95 ஒக்டென் ரக பெட்ரோல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 213 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.