தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகரிக்கப்படவுள்ளது பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணம்

0 451

எரிபொருள் விலையேற்றத்தின் அடிப்படையில், பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை, அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு, மாதாந்தம் தற்போது அறவிடப்படும் தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும்.

கிராம புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் போக்குவரத்து கட்டணங்களை அதிகரித்தால் பெற்றோரின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகளுக்கு வழமையாக மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.