Developed by - Tamilosai
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (25-10-2021) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கௌதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.