Developed by - Tamilosai
வெகுஜன ஊடகத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ஊடக விருதுகளுக்காக தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நிகழ்வை நடத்த இருக்கின்றோம். இந்த விருதுகள் நேர்மையான வகையில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உயரிய விருதாக, ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதுடன், சிங்களம் – தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும், பாடசாலை ஊடகத்துறையில் பிரவேசிக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பாடல் மற்றும் ஊடகம் கற்று ஊடகத்துறையில் பிரவேசிக்கும் சகலருக்கும் ஏதாவது ஒரு முறையில் அரசாங்கத்தின் உயரிய விருதைப் பெறுவதற்கு அணுகும் வகையில் விருது வழங்கும் விழா நடைபெறும்.
ஆசிரியர் குழு, இலத்திரனியல் வெளியீட்டாளர்கள் சங்கம், வெகுஜன ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு நியாயமான முறையில் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.