தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அடுத்ததாக வரப்போகும் சர்ப்ரைஸ். ஹாலிவுட் இயக்குனர்களை ஆச்சரியப்படுத்திய தனுஷ்..

0 105

தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா மொழிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் தி கிரே மேன் என்ற ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். வரும் ஜூலையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது. தனுஷ் ஏற்கனவே ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருக்கு மிகவும் பவர்ஃபுல்லான ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தை காண தனுஷின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கும் சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர்கள் இந்த கதையை தயார் செய்யும் போது தனுஷை மனதில் வைத்துதான் அந்த கேரக்டரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு தனுஷின் நடிப்பு பிடித்ததாகவும், அவர்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கூடியவிரைவில் இந்த படத்தில் தனுஷ் நடித்திருக்கும் அந்த கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய தகவலை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த தகவல் தற்போது தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. தன்னுடைய திறமையால் சிறிது சிறிதாக திரையுலகில் முன்னேறிய தனுஷ் தற்போது ஹாலிவுட் இயக்குனர்களையும் ஆச்சரியப்படுத்தி இருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.