Developed by - Tamilosai
நுவரெலியா, கொத்மலை கெட்டபுலாவ பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஜயதிஸ்ஸ மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுபாசித சில்வா ஆகியோருக்கு இடையிலேயே இவ்வாறு பிரச்சினை ஏற்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.