தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அசாத் சாலி வழக்கு; டிசம்பர் 2ம் திகதி தீர்ப்பு!

0 171

கடந்த மார்ச் மாதம் ஊடக சந்திப்பொன்றில் வைத்து முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முஸ்லிம்கள் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுக்கு வந்துள்ளது.

அசாத் சாலியின் கருத்து, முழுமையாக கேட்கப்படுமிடத்து இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்கும் வகையில் இல்லையென ஏலவே மஜிஸ்திரேட் நீதிபதி தீர்ப்பளித்திருந்த போதிலும் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்ததோடு அதற்கு ஆதரவாக ஐம்பதுக்கு மேற்பட்ட சாட்சிகளையும் தயார் படுத்தியிருந்தார்.

இன்றைய விசாரணையின் போது ஆஜராகியிருந்த ‘தெரிவு செய்யப்பட்ட’ ஐந்து சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்த அசாத் சாலியின் சட்டத்தரணி மைத்ரி குணரத்ன அசாத் சாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட கதைகள் என வாதாடியிருந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் டிசம்பர் 2ம் திகதி வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.