Developed by - Tamilosai
ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சத்திற்கு மத்தியில், இஸ்ரேல் முதல் ‘ஃப்ளோரோனா’ நோய் தொற்றை பதிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸில் தொடங்கி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரோன், டெல்மைக்ரான் என வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது.
உலக அளவில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அடுத்த வைரஸ் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இஸ்ரேலில் ஃப்ளோரோனா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை வைத்தியர்கள் தற்சமயம் கண்டுபிடித்துள்ளனர்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதால், இதற்கு ஃப்ளோரோனா வைரஸ் எனும் பெயர் வைத்துள்ளனர் என்று அரேபிய நியூஸ் தெரிவித்துள்ளது.
டெல் அவைவ் நகரில் உள்ள ராபின் மருத்துவ மையத்துக்கு பிரசவத்துக்காக ஒரு பெண் சென்றார். அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ், இன்ஃப்ளூயன்ஸா இரண்டும் இணைந்த ஃப்ளோரோனா வைரஸ் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.